நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.21 லட்சத்து 70 ஆயிரம் கடனுதவி

பேரணாம்பட்டு நகராட்சி சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.21 லட்சத்து 70 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது.

Update: 2023-08-13 12:07 GMT

பேரணாம்பட்டு நகராட்சி தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட இயக்கத்தின் சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு வங்கிகள் கடனுதவி மற்றும் அறிமுக கூட்டம் பேரணாம்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் வேலவன் தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல், துணைத்தலைவர் ஆலியார்ஜூபேர் அஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சாலையோரம், நடைபாதை மற்றும் தள்ளுவண்டி ஆகியனவற்றில் கீரை, பழம் காய்கறி விற்பனை செய்து வரும் வியாபாரிகள் 217 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.21 லட்சத்து 70 ஆயிரம் கடனுதவி தொகை வழங்கப்பட்டது. மேலும் கடனுதவி தொகையை ஒரு ஆண்டுக்குள் திருப்பி செலுத்தினால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் முத்துசாமி, கனரா வங்கி மேலாளர் புனிதா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் நந்திதாதேவி, உதவி மேலாளர்கள் ஜெயக்குமார், மோகன்ராவ், வங்கி ஊழியர் பாஸ்கரன், நகராட்சி கவுன்சிலர்கள் அப்துல்ஜமீல், அஹம்மத் பாஷா, அப்துல் ஹமீத், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி பீட்டர், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் தவுபிக் அஹம்மத், வார்டு செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரமைப்பு அலுவலர் தினகரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்