சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

நாகை அருகே பனங்குடி சி.பி.சி.எல். நிறுவன வாசலில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-21 18:45 GMT

திட்டச்சேரி:

நாகை அருகே பனங்குடி சி.பி.சி.எல். நிறுவன வாசலில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். (சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் நுழைவு வாசலில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 1989-ம் ஆண்டு இந்த ஆலை நிறுவப்பட்டதில் இருந்து சன்னமங்கலம், பனங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 250 பேர் இங்கு சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சி.பி.சி.எல். அலுவலகத்துக்குள் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் தங்களுக்கு பணி தர மறுப்பதாக குற்றம்சாட்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனால் அலுவலகத்துக்குள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சி.பி.சி.எல். பொது மேலாளர் ரமேஷ்பாபு மற்றும் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் சுமைதூக்கும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்