சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-11-28 18:56 GMT

சிவகாசி,

சிவகாசி காரனேசன் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பழனி போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பட்டாசு சங்க மாவட்ட தலைவர் முருகன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தேவா, முருகாண்டி, கருத்தப்பாண்டி, லாசர், பால்ராஜா, அம்பேத்குமரேசன், மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். நல வாரிய பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும். 100 கிலோ மூடைகளை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்