ஜோலார்பேட்டை அருகே சிறுமி மாயம்

ஜோலார்பேட்டை அருகே சிறுமி மாயமானாள்.

Update: 2022-06-11 13:24 GMT

ஜோலார்பேட்டை

திருப்பத்தூரை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனது இரு மனைவிகள் மற்றும் 15 வயது மதிக்கத்தக்க மகளுடன் 8-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் ெசய்வதற்காக தனது வீட்டில் இருந்து புறப்பட்டு திருப்பத்தூர் வழியாக ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை அடைந்தார்.

அங்கு அவர்கள் ரெயிலுக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் ரெயில் காலதாமதமாக வந்ததால், ஜோலார்பேட்டை அருகில் பெரியகம்மியம்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றனர். அங்குச் சென்றதும் 15 வயது சிறுமியை காணவில்லை. அவர்கள் தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் காணவில்லை.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில், எனது 15 வயது மகளை காணவில்லை, என தந்தை புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன சிறுமியை தேடி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்