மர்ம காய்ச்சலுக்கு சிறுமி சாவு

மூலைக்கரைப்பட்டியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானாள்

Update: 2022-09-29 00:08 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானாள்.

மர்ம காய்ச்சல்

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

சுகாதார துறையினரும் கிராமம், கிராமமாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

சிறுமி சாவு

மூலைக்கரைப்பட்டி பரமசிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 40), டெய்லர். இவரது மூத்த மகள் தங்கவேணி (12). இவள் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 3 நாட்களாக தங்கவேணி காய்ச்சல் மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டாள். பள்ளிக்கும் செல்லவில்லை. இதையடுத்து பெற்றோர், அவளை மூலைக்கரைப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும் காய்ச்சல் குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தங்கவேணி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தாள்.

மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்