குட்டி குடித்தல் திருவிழா

குட்டி குடித்தல் திருவிழா நடந்தது.

Update: 2022-12-11 20:39 GMT

திருச்சி அருகே மேல குழுமணி காவல்கார தெருவில் உள்ள ராஜகாளியம்மன், பெரியகாண்டியம்மன், பனையடி கருப்புசாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத கடைசியில் குட்டி குடிக்கும் திருவிழா நடைபெறும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோப்பு உய்யகொண்டான் வாய்க்கால் பாலத்தில் இரவில் கரகம் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவிலில் குட்டி குடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மன் கொலுவில் வைக்கப்பட்டது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோப்பு உய்யகொண்டான் பாலத்தில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ராஜகாளியம்மன், பெரியகாண்டியம்மன், பனையடி கருப்பசாமி மருளாளிகளுக்கு கோவிலில் மருள் வரவழைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மருளாளிகள் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்கள் வழங்கிய ஆடு மற்றும் கோழிகளின் ரத்தத்தை குடித்தனர். அருள்வாக்கும் கூறப்பட்டது. பின்னர் மருளாளிகள் முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவில் குடிபுகும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்