குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்

குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-11 18:19 GMT


வாலாஜா டோல்கேட்டில் இருந்து ராணிப்பேட்டை வரும் பைபாஸ் சாலையில், குடிமல்லூருக்கு செல்லும் வழி உள்ளது. இங்குள்ள பை- பாஸ் சர்வீஸ் ரோட்டு ஓரத்தில் குப்பைகளும், காய்கறி கழிவுகளும் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் சிரமப்படுகிறார்கள்.. எனவே இங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்