திருப்பத்தூரில் ரெட்டைமலை சீனிவாச பேட்டையில் இருந்து தில்லை நகர் செல்லும் சாலையில் தனியார் நிதியுதவி தொடக்கப்பள்ளியின் முன்பு குப்பைகள் அதிக அளவு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கல் கோரிக்கை விடுத்துள்ளனர்.