தெருக்களில் குப்பைகள் கொட்டுவதைகண்காணிக்க சிறப்பு குழு
நாகையில் 36 இடங்களில் தெருக்களில் குப்பைகள் கொட்டுவதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
நாகையில் 36 இடங்களில் தெருக்களில் குப்பைகள் கொட்டுவதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
புகையில்லா போகி
நாகையில் நகராட்சி சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நகர் மன்ற துணை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வைத்தார். ஊர்வலமானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நாகை நகராட்சி அலுவலக வளாகத்தை சென்றடைந்தது. அங்கு புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி பேசியதாவது:-
36 இடங்களில் சிறப்பு கண்காணிப்பு குழு
போகி பண்டிகை தினத்தில் வீதிகளில் குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிக்க கூடாது. இதனால் காற்று மாசுபடும். வீதிகளில் குப்பைகளை கொட்டாமல் தடுக்க நகர பகுதியில் 36 இடங்களில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் வீடுகள் தோறும் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரித்து வாங்கி செல்வார்கள். இதையும் மீறி வீதிகளில் குப்பைகளை கொட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். புகையில்லா போகியை கொண்டாட நாம் ஒவ்வொருவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார். இதில் நகர் மன்ற கவுன்சிலர்கள் அண்ணாதுரை, திலகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.