ஆலங்குளம்,
சிவகாசி, கல்லமநாயக்கர்பட்டி, எஸ்.எம்.எஸ். கல்லூரியில், தமிழ்துறை சார்பாக வாகை இலக்கியமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி தாளாளர் குன்னக்குடி முத்துவாழி தலைமை தாங்கினார். எஸ்.எம்.எஸ்.கல்லூரி டீன், டாக்டர் பிரபுதாஸ் குமார், இலக்கியமன்ற கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கல்லமநாயக்கர்பட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொறுப்பு) ஸ்ரீலேகா முன்னிலை வகித்தார். டாக்டர்கள் கோகிலா, நவீன்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வானம் வசைப்படும் என்ற தலைப்பில் பேசினர். இதில் பாலிடெக்னிக் முதல்வர் ராஜநாயகன், கல்லூரி நிர்வாக அதிகாரி மாரிமுத்து, கல்லூரி மக்கள் தொடர்பு அதிகாரி பொன்னுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை தலைவர் ராஜ்குமார் செய்திருந்தார்.