புத்தக திருவிழாவையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு இலக்கிய போட்டிகள்

புத்தக திருவிழாவையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு இலக்கிய போட்டிகள் நடைபெற்றது.

Update: 2022-07-23 19:23 GMT

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5-வது புத்தக திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டி மற்றும் குறும்பட போட்டிகள், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. போட்டிகளை கவிஞர் தங்கம் மூர்த்தி தொடங்கி வைத்தார். அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் வீரமுத்து வரவேற்று பேசினார். கவிஞர் முத்துநிலவன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் பேச்சுப்போட்டியில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் பபிதா முதல் இடத்தையும், ஜெயலெட்சுமி 2-வது இடத்தையும், மவுண்ட் சீயோன் கல்லூரியின் மாணவர் அரவிந்த் 3-வது இடத்தையும் பெற்றனர். பிற போட்டிகளுக்கான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்