வட்டார அளவிலான கலை இலக்கிய போட்டிகள்
வட்டார அளவிலான கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது.
காரைக்குடி,
பூதக்கண்ணாடி கல்வி மையம் சார்பில் வட்டார அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நல்லாசிரியர் மெ.செயம்கொண்டான் வரவேற்றார். ஆடிட்டர் திருப்பதி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். ஆறு மெய்யாண்டவர், சங்கரதாஸ், தமிழ்மதி நாகராசன், ஆசிரியர் செல்வகுமார், ஆசிரியை அறிவுச்செல்வி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். இதில் மாணவர்களுக்கான கதை, கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் மொத்தம் 16 பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பழ.அங்கம்மை நன்றி கூறினார்.