புதூரில் எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
புதூரில் எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
எட்டயபுரம்:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதூர் வட்டார வளமையத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் வட்டார வள மையம் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் ராமசுப்ரமணியன்
தலைமை தாங்கினார். இதில், வட்டார கல்வி அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான பணிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கற்போருக்கான பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு)சித்ரா, ஆசிரியர் பயிற்றுநர்கள் ராமர், ஜெயசுதா, மிதிலை குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்