முறைகேட்டில் ஈடுபட்ட மதுபான கடை பணியாளர்களுக்கு ரூ.2¾ லட்சம் அபராதம் - கலெக்டா் தகவல்

முறைகேட்டில் ஈடுபட்ட மதுபான கடை பணியாளர்களுக்கு ரூ.2¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.

Update: 2023-06-13 22:00 GMT

முறைகேட்டில் ஈடுபட்ட மதுபான கடை பணியாளர்களுக்கு ரூ.2¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.

கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் மது விற்பனையை தடுப்பது குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 207 டாஸ்மாக் கடைகளும் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும். சட்ட விரோதமாக மதுக்கூடங்கள் செயல்பட்டாலோ, கள்ளச்சாராயம், வெளிமாநில மதுபானங்கள், போலி மதுபானம் விற்பனை செய்யப்பட்டாலோ உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். மதுபானங்களில் அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. மதுபான கடைகளில் ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி கடந்த மாதம் 1-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை தவறு செய்த மதுபான பணியாளர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மதுபானம் தொடர்பான புகார்களை 18004252015 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா கூறினார். இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்