நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேப்ளாப்பட்டி ஊராட்சி மேலமேடு பகுதியில் வீட்டின் பின்புறம் மது விற்ற முருகன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.