மது விற்றவர் கைது - மதுபாட்டில்கள் பறிமுதல்

போலீசார் வழக்குப்பதிவு செய்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்

Update: 2023-06-22 19:30 GMT

அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகார் சோழன், சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அம்மாப்பேட்டை போலீஸ் சரக பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கம்பர் நத்தம் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது58) என்பவர் அவரது வீட்டிற்கு அருகே மது விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து அவரிடம் இருந்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்