சாராயம் விற்றவர் கைது
சங்கராபுரத்தில் சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் அ.பாண்டலம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மாரியம்மன் கோவில் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த ராஜவேல் (வயது 30) என்பவரை போலீசாா் கைது செய்தனர். அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயம பறிமுதல் செய்யப்பட்டது.