மது விற்றவர் கைது

பேய்க்குளம் அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-06 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம், பேய்குளம் பகுதியில் மதுவை சிலர் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேய்க்குளம் அடுத்த குருகால்பேரி பகுதியில் போலீசாரை பார்த்தவுடன், கையில் வைத்திருந்த சாக்கு பையை கீழே போட்டுவிட்டு ஒருவர் தப்பி ஓடினார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில், அவர் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கால்வாய் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன் (வயது 37) என்பதும், இவர் அரசு மதுபான கடைகளில் மது பாட்டில்களை வாங்கி, பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது. அவர் கீழே போட்டிருந்த சாக்குப்பையில் ேசாதனை நடத்தியபோது, 90 மதுபாட்டில்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்