மதுபானம் விற்றவர் கைது

கூடலூரில் மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-03 18:45 GMT

கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் சுருளி அருவி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குள்ளப்பகவுண்டன்பட்டி பிரிவு அருகே கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனர். அதில், அவரிடம் 24 மதுபாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கருநாக்கமுத்தன்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வேந்திரன் (வயது 38) என்பதும், மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி சில்லறை விலையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்