ஆனைமலை
ஆனைமலையை அடுத்த சேத்துமடை பகுதியில் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆனைமலை போலீசார் சேத்துமடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி(வயது 44) என்ற கூலித்தொழிலாளி விற்பனை செய்வதற்காக 13 மது பாட்டில்களை வைத்திருந்தார். அவரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர். மேலும் மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.