மது விற்றவர் கைது

கலவையில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-24 11:55 GMT

கலவையை அடுத்த கலவை கூட்ரோடு அருகே கலவை இன்ஸ்பெக்டர் சரவணன் மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுராமன், சுரேஷ்பாபு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெட்ரோல் பங்க் அருகே அரும்பாக்கத்தை சேர்ந்த ஆனந்தன் மகன் ஜானகிராமன் என்பவர் அரசு மதுபானங்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தார்.

அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 420 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்