அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் கயர்லாபாத் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அருங்கால் காலனி தெருவை சேர்ந்த கொல்லிமலை(வயது 43) என்பவர் ஜி.கே.எம். சுடுகாடு பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.