திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி நத்தம் பகுதியில் திருக்கண்ணபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நத்தம் நடுத்தெருவை சேர்ந்த கலைவாணன் (வயது 48) என்பதும், அவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைவாணனை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.