மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-13 19:08 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீசார் கல்லாத்தூர் தண்டலை பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்டறிய தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாத்தூர் ஏரிக்கரை அருகே மது விற்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த குமாரின் மகன் மதிவாணன்(வயது 27) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதிவாணனை கைது செய்து, அவரிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்