சிவகிரி:
சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார் ராயகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ராயகிரி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் அருண்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.