மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-13 20:30 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் பிச்சனூர் பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடத்தப்பட்ட சோதனையில் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், அதே பகுதியில் உள்ள காலனித் தெருவை சேர்ந்த ஜெயராமன்(வயது 70) என்பதும், பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்