மசினகுடி
மசினகுடி மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அச்சனக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் அச்சனகரையை சேர்ந்த ஜான் ஜோசப் என்பதும் மது விற்பனையில் ஈடுபட்டு இருந்ததும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.