மதுவிற்றவர் கைது

மதுவிற்றவர் கைது

Update: 2023-01-22 19:09 GMT

சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் தலைமையில் போலீசார் சுவாமிமலை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுவாமிமலை அருகே உள்ள மூப்பகோவில் பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏராகரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர்(வயது55) என்பதும், மதுவிற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்து அவரிடம் இருந்த 25 மதுபாட்டில்களையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்