மதுபானம் விற்றவர் கைது
போடியில் மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வஞ்சிஓடை தெருவில் உள்ள குண்டலீஸ்வரி கோவில் அருகே, மதுபானம் விற்று கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது40) என்பவரை மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து 11 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வராஜை கைது செய்தனர்.