மது விற்றவர் கைது

சிவகிரி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-21 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையில் போலீசார் தென்மலை வண்ணான்பாறை என்ற ஏ.சுப்பிரமணியாபுரம், மேட்டுப்பட்டி, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்மலை மந்தை அருகே செல்லிபட்டணம் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் மகன் கார்த்திக், சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்