வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் உள்ள ஒரு கழிவறைக்குள் மது விற்று கொண்டிருந்த காந்திநகர் பகுதியை சேர்ந்த ராஜாக்கண்ணு (வயது 64) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.