திருப்புவனம்,
திருப்புவனம் புதூர் பஜனைமட தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(வயது 48). தொழிலாளியான இவர் அப்பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் மது பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் அங்கு சென்று விசாரணை நடத்தி சுந்தர்ராஜன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.