தொண்டி
தொண்டி அருகே நம்புதாளை செல்லும் சாலையில் உருளைகல் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதாக தொண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்பனை செய்த ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த சக்தி(வயது 34) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 51 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.