வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மூலிமங்கலம் பிரிவு அருகே மது விற்றதாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே ஆர்.எஸ். மங்கலம் பகுதியை சேர்ந்த வினோத் (வயது 27) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.