மதுபானம் விற்றவர் கைது
திண்டுக்கல் அருகே மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான போலீசார் நேற்று பொன்மாந்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 63) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.