சாராயம் விற்றவர் கைது

சீர்காழி அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ௧௧௦ லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-08-22 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் அம்மா பூங்கா அருகில் தடை செய்யப்பட்ட சாராயம் விற்பனை செய்யப்படுவதாக சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சீர்காழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த திருமுல்லைவாசல் அம்பேத்கர் நகரை சேர்ந்த ராம்குமார் (வயது 43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்