மது விற்றவர் கைது

உடன்குடியில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-25 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர், உடன்குடி பஸ் நிலையம் பகுதியில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டு அருகில் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்று கொண்டிருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை பிடித்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்