தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது,கொசூர் சந்தை அருகே திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் என்பவர் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.