சாராயம் விற்றவர் கைது

திருமருகலில் சாராயம் விற்றவர் கைது

Update: 2023-07-09 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் சவுக்கு தோப்பு பகுதியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமருகல் சவுக்கு தோப்பு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் சந்திரபோஸ் (வயது 38) என்பவர் அந்த பகுதியில் சாராயம் விற்றது தெரியவந்தது.

மேலும் இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரபோசை கைது செய்தனர். மேலும் அவரிடம்இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்