சாராயம் பதுக்கியவர் கைது

சின்னசேலம் அருகே சாராயம் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-07 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் நேற்று காலை நாககுப்பம் கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது 48) என்பவர் தனது விவசாய நிலத்தில் 230 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததோடு, சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் சாராயத்தை பதுக்கி வைத்தது தொடர்பாக சின்னதுரை மகன்கள் உதயசூரியன் (25), சுரேஷ் (22), சுதாகர் (22) மற்றும் நாகராஜ் (25) ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்