சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 44). இவர், சாராய விற்பனையில் ஈடுபட்ட போது திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து இவர் சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.