சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை தாலுகா கிளியாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 30). இவர் சாராய விற்பனையில் ஈடுபட்ட போது செங்கம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் சட்டவிரோத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அதனை கட்டுப்படுத்தம் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்தரை செய்தார். அதனை ஏற்று தமிழ்மணியை குண்டர்சட்டத்தில் அடைக்க கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.