தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

திண்டிவனம் அருகே தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

Update: 2023-06-25 18:45 GMT

விழுப்புரம்

திண்டிவனம் கிடங்கல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கிருபாநிதி(வயது 49). இவர் மீது சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் கிருபாநிதியை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திண்டிவனம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்