குண்டர் தடுப்பு சட்டத்தில் சாராய வியாபாரி கைது
குண்டர் தடுப்பு சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை செய்ததாக ரத்தினகிரியை அடுத்த மேலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பழனி (வயது 53) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டருக்கு பரிந்துரைசெய்தார். அதன்பேரில் பழனியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.