ரேஷன் கடை அருகே கிடக்கும் மதுபாட்டில்கள்

நாகை பாரதி மார்க்கெட் ரேஷன் கடை அருகே மதுபாட்டில்கள் கிடப்பதால் இரவு நேரத்தில் இந்த பகுதியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-13 18:45 GMT


நாகை பாரதி மார்க்கெட் ரேஷன் கடை அருகே மதுபாட்டில்கள் கிடப்பதால் இரவு நேரத்தில் இந்த பகுதியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரேஷன் கடை

நாகை நகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டில் பாரதி மார்க்கெட் அருகில் நாகை பொதுப்பணியாளர் கூட்டுறவு பண்டக சாலையின் பகுதி நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. கடந்த 2011-12-ம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இது பகுதி நேர ரேஷன் கடை என்பதால், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5.30 மணி வரை மட்டுமே இயங்கும்.

மதுபாட்டில்கள்

இந்த கட்டிடம் ஒதுக்குபுறமாக இருப்பதாலும், அந்த இடத்தில் மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் ரேஷன்கடை முன், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தி விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். சிலர் பாட்டிலை உடைத்து போட்டு விட்டு போய் விடுகிறார்கள்.

இதனால் ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பெண்கள், மதுபான பாட்டில்களை பார்த்து ெவறுப்படைகிறார்கள்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி வெளிப்பாளையம் போலீசார் இரவு ரோந்து பணியின் போது, ரேஷன் கடையின் முன்பு மது அருந்துபவா்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரேஷன் கடை அருகில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்