மது பாட்டில்கள் விற்றவர் கைது
மது பாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் தொரவளூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதேபகுதியை சேர்ந்த கொளஞ்சி (வயது 55) என்பவர் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.