பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையம்

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 250 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும்.

Update: 2022-07-03 18:04 GMT

ஆக்சிஜன் உற்பத்தி மையம்

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த மருத்துவமனைக்கு பெரம்பலூர் மாவட்டமின்றி, அருகே உள்ள மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் சார்பில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ நிலையிலான ஆக்சிஜன் உற்பத்தி கலன் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

250 நோயாளிகளுக்கு வழங்கலாம்

இதனை கடந்த 18-ந்தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து அந்த ஆக்சிஜன் உற்பத்தி கலன் மையம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் அர்ச்சுனன் கூறுகையில், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது தனியார் மருத்துவமனைக்கு நிகராக நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் போதிய இடவசதியுடன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தற்போது மருத்துவமனையில் இந்த திரவ ஆக்சிஜன் மையத்தின் மூலம் தேவைப்படும் 250 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க வாய்ப்பு உள்ளது. இதனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையே ஏற்படாது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்