கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு

Update: 2022-07-02 17:35 GMT



ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள நஞ்சை கவுண்டன்பாளையம், ஓடந்துறையை சேர்ந்தவர் ராஜூபோயன் (வயது 76). ஆயுள் தண்டனை கைதியான இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த 25-ந் தேதி சிறையில் வைத்து திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்:

Tags:    

மேலும் செய்திகள்