மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-பெரம்பலூர் கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-06-22 20:15 GMT

மனைவி கொலை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா அத்தியூர் மேலத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 63), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அஞ்சலை (59). நடராஜன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி அவரை களைவெட்டியால் வெட்டிக்கொலை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடராஜனின் மகன் ராஜா கொடுத்த புகாரின் பேரில், மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நடராஜன் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.

ஆயுள் தண்டனை

விசாரணை முடிந்த இந்த வழக்கிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பல்கீஸ் நேற்று தீர்ப்பு வழங்கினார். மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமாக ரூ.ஆயிரமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

இதையடுத்து நடராஜனை மங்களமேடு போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்