கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-12-12 18:59 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ராஜபாளையம் அருகே உள்ள தென்கரை பகுதியில் வசித்து வந்தவர் காளியம்மாள் (வயது 50.). இவர் சத்துணவு உதவியாளராக பணியாற்றினார். இந்தநிலையில் 29.8.2018 அன்று அதே பகுதியை சேர்ந்த வெள்ளையம்மாள் (37) என்பவர் காளியம்மாளை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். மேலும் காளியம்மாள் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளையம்மாளை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பகவதியம்மாள் விசாரித்து வெள்ளையம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்